தீராத ஆசை ஒன்று
காற்றோடு போகின்றதே, ஏன்

ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதே, ஏன்

என் அன்பே, என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா

நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா...

கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்று, பார்
ஆ... திசை இல்லா வானின் மேலே
துணையில்லா பறவை ஒன்று, பார்
ஹோ ஹோ ஓஒ ஓஒ...

உன் ஒளியாலே
உள் ஈரம் போக்கிட வா...
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்ல... வா...

விழி ஒன்று தா மன்னவா...
ஹா... ஆஅ... ஹா... ஆ... ம்ம்ம்

என் அன்பே, என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா

நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா...

Comments (0)