வான்வெளி பாதை மேலே வேகமாய் உலாவலாமே
பூமியே தொடவே வேண்டாம் வாழ்நாளிலே
வெண்ணிலா வேர்வை கொஞ்சம் மின்மினி முத்தங்கள் கொஞ்சம்
கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம் நாம் காணவே
என் சிறு துணி உனில் விழும்போது
உன் இருதயம் அமுதுகள் நீங்க
என் நறுமணம் எழுகிற போது
உன் நரம்புகள் கரும்புகளாக
உலகமே மூட்டை பூச்சி நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என வச்சு எரிச்சி இளைப்பாற வா
காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே தைச்சல்
காலிலே முதலையின் கவ்வல் நீ நீங்கி வா
உன் தங்கக் காசெல்லாம் வெறும் வாழ்வை வெல்லுமடா
உல்லாசம் ஒன்றே தான் உன் சாவை வெல்லுமடா
நான் ஒளியின் வேகமடா நீ எண்ணில் கலந்திட்டால் உன் காலம் மாறுமடா
வாடா
வா மது உண்டு ஆடும் எனை கண்டு
தூரம் நின்று கொண்டு ஓடாதே கோடை கண்டு
வாழ்வென்பது வானின் அளவல்ல
கோப்பை அளவு தான் சிந்தாதே நீ அறிந்து
என் சிறு துணி உனில் விழும்போது
உன் இருதயம் அமுதுகள் நீங்க
என் நறுமணம் எழுகிற போது
உன் நரம்புகள் கரும்புகளாக
உலகமே மூட்டை பூச்சி நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என வச்சு எரிச்சி இளைப்பாற வா
காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே தைச்சல்
காலிலே முதலையின் கவ்வல் நீ நீங்கி வா
Comments (0)