Karthik – Pudhidhaa Lyrics

புதிதா
புவியெல்லாமே புதிதா
புதிதா
மனமெல்லாமே புதிதா

ஒரு யாக்கை
ஒரு வாழ்க்கை
அதைக்கூட வாழா வாழ்வென்ன
நண்பா

சிறு கூடும் சிறு நெஞ்சும்
அதற்குள்ளே குப்பை மேடென்ன
என் நண்பா

புதிதா
புவியெல்லாமே புதிதா
புதிதா
மனமெல்லாமே புதிதா

ஏன்? ஏன் யோசனை?
எது இல்லை உன்னுள்ளே
கண்ணின் உள்ளே
கனவா இல்லை
சுவாசப் பையில்
காற்றா இல்லை
ஓவியத்தில் வாழும் வரை
வண்ணத்தில் பஞ்சங்கள் இல்லையே
தனிமை தானே துணையும்
உன் துணைதானே உடன் வரும் இறுதிவரை
போகிற போக்கில் வெற்றி விரி
குப்பைகளெல்லாம் தூக்கி எறி
கவலைகள் பார்த்து கொஞ்சம் சிரி

புதிதா
புவியெல்லாமே புதிதா
புதிதா
மனமெல்லாமே புதிதா

ஒரு யாக்கை
ஒரு வாழ்க்கை
அதைக்கூட வாழா வாழ்வென்ன
நண்பா
சிறு கூடும் சிறு நெஞ்சும்
அதற்குள்ளே குப்பை மேடென்ன
என் நண்பா

மனமெல்லாமே புதிதா

Comments (0)