Kaber Vasuki – Yaar Ivan Lyrics

யார் இவன்?
தூணிலும் துரும்பிலும் கண்கள்
வைத்துக் கொண்டு பார்ப்பவன்
வான், கடல், மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு கேட்பவன்

காதோரம் வாய் வெச்சே
காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை எல்லாம்
அவன் சிறையிலே செத்திடுச்சு

எங்க போயி ஒளிஞ்சாலும்
ஏதோ ஒன்னு பாக்குது
யாருகிட்ட பேசினாலும்
ஏதோ ஒன்னு கேக்குது

அடிமையாக்க ஓங்கியிருந்தா
அடிதடின்னு எறங்கலாம்
ஆசையத்தான் காட்டி இப்ப
காலை வாறி வெட்டுறான்

யார் இவன்?
தூணிலும் துரும்பிலும் கண்கள்
வைத்துக் கொண்டு பார்ப்பவன்
வான், கடல், மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு கேட்பவன்

வேஷத்த இழந்தாச்சு
வானம் பாத்து கையக் கட்டு
உத்தமன் தான் இல்லையின்னு
வங்கியில வட்டிக் கட்டு

எப்பப்பயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியுது
கோட்டை விட்டு தோத்தபின்
தான் ஆட்டமே புரியுது

எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடிப் பாக்க போயித்தான்
உருவமில்லா மிருகமா தான்
கற்பனையில சிரிக்கிறான்

யார் இவன்?
யார் இவன்?

கருவிய கையில பிடிச்சு
கனவு கூச்சம் காசையெல்லாம் பொதைச்சு
ரகசியம் பூட்டித்தான் அடைச்சு
யாருக்கும் தெரியாம மறைச்சு

இலவச விளம்பரமுன்னு
அதன் வசம் இழுத்துச்சே
எல்லை இல்லா ஆசைப்படுன்னு
கூச்சல்லாம சொல்லுச்சே

சாக்கு இப்ப இருக்குது
சாவி இனி பொருந்துது
பூட்டுருக்க பூட்டிருக்க
வெச்ச சரக்கு மட்டும் கரையுது

Comments (0)