D. Imman – Marandaaye (Unplugged Version) Lyrics

மறந்தாயே, மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா, அவதியா, சகதியா?
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா, சலனமா, மரணமா?

தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்

யாரடி, யாரடி நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி
யாரடி, யாரடி பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி

மறந்தாயே, மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

மனித இனம் மரம் செடியை மறந்தது போல்
மரம் செடிகள் மழை முகிளை மறந்திடுமா?
விழி திறந்தாள் அருங்கனவு கலைவது போல்
மனம் திறந்தாள் ஒரு உறவு கலைந்திடுமா?

அயதோறு கனவாய் உயிர் கொண்டு எழுந்தாய்
கனவினை கலைத்திட மறுகளித்தது ஏன்?
இனிமையில் எளிதாய் எழுட்டிடும் தரலாய்
இதயத்தில் இருந்து நீ என்னை அழித்தது ஏன்?

மண்ணின் இன்பம் யாவும் என்னில் என்றாய்
என்னை போலே நண்பன் இல்லை என்றாய்
ஒருநொடி பொழுதிலே முழுவதும் மறந்தாய்

மறந்தாயே, மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா, அவதியா, சகதியா?
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா, சலனமா, மரணமா?

தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்

யாரடி, யாரடி நான் இனி யாரடி
ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி
யாரடி, யாரடி பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி

மறந்தாயே, மறந்தாயே...

Comments (0)